பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பிறந்தநாள் விழா

ஜெயங்கொண்டத்தில் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை, மரக்கன்று மற்றும் உணவுகள் வழங்கி கொண்டாடினார்.;

Update: 2025-01-31 11:46 GMT
அரியலூர், ஜன..31- பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை மக்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் உணவு வழங்கி கொண்டாடினர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் 53 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டம் நகர செயலாளர் கங்காசலம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.க.குமார் கலந்துகொண்டு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள், மரக்கன்றுகள்,மதிய உணவுகள் வழங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அன்பு தாசன் வரவேற்று பேசினார்., சக்திசாம்பசிவம், ஹச்முகமது, அருள்மணி ஆகியோர் முன்னிலை பகிர்ந்து பேசினர்,, நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News