உயா் கல்வி பயிலும் முன்னாள் மாணவா்களின் கலந்துரையாடல், கருத்தரங்கம்.
மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.;

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அரசு மாதிரி உயா்நிலை, மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று, உயா் கல்வி பயிலும் முன்னாள் மாணவா்களின் கலந்துரையாடல், கருத்தரங்கம் (பிப்ரவரி 1) நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலா் காளிதாஸ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.