படுக்கை அறையில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி

குமரி;

Update: 2025-02-02 06:42 GMT
படுக்கை அறையில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
  • whatsapp icon
குமரி மாவட்டம்   சாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் குமார் (47). தொழிலாளி. இவரது மனைவி அஜி வெளிநாட்டில் செவிலியராக பணியாற்றி வருகிறார். குழந்தைகள் அஜியின் உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் குமார் தனிமையாக வசித்து வந்தார்.     தினமும் மனைவி மற்றும்  குழந்தைகளிடம் போனில் பேசுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தின இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் போனில் குமார்  பேசவில்லை. நேற்று காலையும்  பலமுறை குமாரை தொடர்பு கொண்டும் அவர் போன் எடுக்காததால்,   சந்தேகம் அடைந்த அஜி தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து குமாரின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.       குமாரின் வீட்டுக் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கே உள்ள படுக்கை அறையில் குமார் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து திருவட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி அஜிக்கு  தெரிவிக்கப்பட்டது.       குமார் மாரடைப்பால் இறந்தாரா?. அல்லது தற்கொலையா? என்பது குறித்து திருவட்டாறு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News