
திண்டிவனம் வட்டம், சாத்தனூா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் காசி (50). இவா், ஞாயிற்றுக்கிழமை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே நடந்து சென்றாா்.அப்போது, சென்னை நோக்கிச் சென்ற காா் மோதியதில், காசி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காசி, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.