கடல் ஆமைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மீன்வளத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

அரிய வகை கடல் ஆமைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மீன்வளத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;

Update: 2025-02-05 11:55 GMT
அரிய வகை கடல் ஆமைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மீன்வளத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கடல் ஆமைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் அதனை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று பழவேற்காட்டில் நடைபெற்றது இதில் கல்லூரி மாணவர்கள் அரசு அலுவலர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்கள் மற்றும் மீனவர்களிடையே கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் கடல் ஆமைகளை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இதில் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் மீன்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

Similar News