சத்தியமங்கலத்தில் தொழிலாளி தற்கொலை

சத்தியமங்கலத்தில் தொழிலாளி தற்கொலை;

Update: 2025-02-06 05:41 GMT
சத்தியமங்கலத்தில் தொழிலாளி தற்கொலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தேள்கரடு பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (45). கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியா கணவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மோகன் தாயார் சரோஜினியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே மனைவி பிரிந்து சென்றதால் கடந்த சில நாட்களாக மோகன் மனவேதனையில் இருந்தார். இந்தநிலையில் நேற்று பகல் 3 மணி அளவில் அறைக்குள் இருந்த மகனை சரோஜினி அழைத்தார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. அதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத் துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது மின்வி சிறியில் மின்சார ஒயரை கட்டி மோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News