விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு
விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு;
விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தாழ்குனி அக்கரைப்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 46). விவசாய கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி குன்னத்தூர்-கோபி செல்லும் ரோட்டில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் மூர்த்தி படுகாயம் அடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் மீண்டும் கடந்த மாதம் 15-ந் தேதி மூர்த்திக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.