சிவன்மலை கல்லேரி சாலை போடும் பணி துவங்கியது
சிவன்மலை கல்லேரி சாலை போடும் பணி துவங்கியது மூன்று நாட்களில் தைப்பூச தேர் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தற்போது சாலை போடும் பணி துவங்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு;
சிவன்மலையில் இருந்து சென்னிமலை சாலை கல்லேரியை இணைக்கும் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை புதுப்பிக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. சாலைகள் பறிக்கப்பட்டு பாலங்கள் கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்ட நிலையில் காங்கேயம் சுற்றி சிவன்மலை வரவேண்டிய சூழ்நிலை உருவாகி இருந்தது. இதனால் பக்தர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களை சந்தித்து வந்தனர். வரும் பிப்ரவரி 11, 12, 13 ஆகிய தினங்களில் 1சிவன்மலை தைப்பூச தேர் திருவிழா நடைபெற உள்ளது இதனை கருத்தில் கொண்டு தற்போது அவசர அவசரமாக அந்த சாலைக்கு தார் போடும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது.