காங்கேயம் வழக்கறிஞர் சங்க பதவி ஏற்பு விழா
காங்கேயம் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு விழா ;
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 2025 -2027 காங்கேயம் வழக்கறிஞர் சங்க தேர்தல் கடந்த வாரத்தில் நடைபெற்றது. இதில் தலைவருக்கு கே.சி.மோகன் குமார், என்.கார்த்திகேயன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் இருவருமே சரிசமமான வாக்குகள் பெற்றிருந்தனர். மேலும் இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வழக்கறிஞர்களுக்கு பதவி ஏற்பு விழா காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 2025 -2026 தலைவராக கே.சி.மோகன் குமார் 2026 -2027 வருடத்திற்கு என்.கார்த்திகேயன் தலைவர்களாக பதவி பிரமாணம் செய்துகொண்டனர். மேலும் துணை தலைவராக கந்த சரவணகுமாரும், செயலாளராக எம்.சரவணகுமாரும், பொருளாளராக ஆர்.எஸ்.பிரபாகரனும், இணைச் செயலாளராக குப்புசாமி, நூலகராக பிரகாஷ்,செயற்குழு உறுப்பினர்களாக நவீன், முருகவேல், சரண்யா,தேன்மொழி,விவின் பிரபாகரன், ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். பதவியேற்பு விழாவில் மூத்த வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம், கந்தசாமி லிங்கசாமி, ஈஸ்வரமூர்த்தி, பூபதி,கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். புதிதாக பதவி ஏற்று கொண்ட நிர்வாகிகளுக்கு சக வழக்கறிஞர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பதிவு ஏற்றுக்கொண்ட வழக்கறிஞர்கள் தேர்தலுக்காக ஒத்துழைப்பு வழங்கிய சக வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.