பல்லடம் அருகே முத்துக்குமாரசாமி மலைக்கோவில் தைப்பூச விழா

பல்லடம் அருகே முத்துக்குமாரசாமி மலைக்கோவில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது;

Update: 2025-02-08 02:07 GMT
பல்லடம் அருகே மாதப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவில் தைப்பூச தேரோட்ட விழா நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வேல்வியுடன் தொடங்கியது. பின்னர் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6:30 மணிக்கு தைப்பூச கொடியேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வருகிற 10 தேதி வரை தினசரி மாலையில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆன தைப்பூச தேரோட்டம் 11ம் தேதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு மகாபிஷேகம் காலை 6:00 மணிக்கு அலங்கார பூஜ்யும் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 4.30 மணிக்கு தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும் காவடி ஆட்டமும் நடைபெற உள்ளது.

Similar News