திருநெல்வேலி மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 11) அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவும் கலந்து கொண்டு அன்னதானத்தை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர், பக்தர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.