ஜெயங்கொண்டம் வட்டார விவசாயிகளின் நிலஉடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் முகாம்
ஜெயங்கொண்டம் வட்டார விவசாயிகளின் நிலஉடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் முகாம் பிப்ரவரி 9 ம் தேதி முதல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது;
அரியலூர், பிப்.11- ஜெயங்கொண்டம் வட்டார விவசாயிகளின் நிலஉடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் முகாம் பிப்ரவரி 9 ம் தேதி முதல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது விவசாயிகள் தங்களின் நில உடைமைப் பதிவுகளை சரிபார்க்க ஒரு பொன்னான வாய்ப்பு தங்கள் கிராமம் தேடி வருகிறது. ஜெயங்கொண்டம் வேளாண்மை வட்டாரத்தில் வேளான் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் முகாம் பிப்ரவரி 9 ம் தேதி முதல் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இம்முகாமில் விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றப்பட்டு விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் (UNIQUE ID) வழங்கப்பட உள்ளது. இனி வரும் காலங்களில் அரசுகளின் விவசாயம் சார்ந்த அனைத்து திட்ட பயன்களும் இதன் அடிப்படையிலேயே வழங்கப்படும். முகாமிற்கு கொண்டுவரவேண்டிய ஆவணங்கள் ஆதார் அட்டை,நிலப்பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி, மற்றும் ரேஷன் அட்டை நகல் முகாம் நடைபெறும் இடங்கள் ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் ஆகிய இடங்களில் பிப்ரவரி 9 ஞாயிறு முதல் 20 ம் தேதி வியாழன் வரை முகாம்கள் நடைபெறுகிறது . இவ்வாறு ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.