ஜெயங்கொண்டம் அருகே தீராத வயிற்று வலியால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை .
ஜெயங்கொண்டம் அருகே தீராத வயிற்று வலியால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்தார்.;
அரியலூர், பிப்.12- ஜெயங்கொண்டம் அருகே வடக்கு புது குடி கிராமத்தைச் சேர்ந்த பாலுசாமி -சங்கீதா தம்பதியினருக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். தற்போது குஞ்சிதபாதபுரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர். இவர்களின் இளைய மகள் ஸ்வேதா (18) இவர் கோயமுத்தூரில் உள்ள கல்லூரியில் டி. பார்ம் படித்து வருகின்றார். ஸ்வேதா விற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற கல்லூரியில் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதை அடுத்து அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அழைத்துச் சென்றுள்ளனர். ஸ்வேதா கடந்த சில தினங்களாக வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில். கடும் வயிற்று வலி காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மேல குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.