தா.பழூர் அரசு சமுதாய சுகாதார வளாகத்தில் துணை முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
தா.பழூர் அரசு சமுதாய சுகாதார வளாகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது;
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு சமுதாய சுகாதார வளாகத்தில், திமுக இளைஞரணி செயலாளரும். தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தா.பழூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ,எம்எல்ஏவுமான க.சொ.க.கண்ணன் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி, மருத்துவர் மாலதி கண்ணன்,முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, பொருளாளர் த.நாகராஜன்,ஒன்றிய துணை செயலாளர்கள் க.சாமிதுரை,அ.இராஜேந்திரன்,மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன், சி.கண்ணதாசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திகைகுமரன், தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் மருத்துவர்கள்,செவிலியர்கள்,க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.