ஆண்டிமடம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஆண்டிமடம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார்.;
அரியலூர், பிப்.12- தமிழ்நாடு முதலமைச்சர், திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் தளபதியார்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சா.சி. ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், 1).ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில், NABARD RIDF 2024-2025-ன் கீழ்,ரூ188.48 இலட்சம் மதிப்பீட்டில், கூடுதல் 8 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமானப் பணி, 2).ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில்,15-வது நிதிக்குழு மானியம் 2024-2025 திட்டத்தின் கீழ்,ரூ 50.00 இலட்சம் மதிப்பீட்டில்,வட்டார சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமானப் பணி, 3).ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில்,15-வது நிதிக்குழு மான்யம் 2024-2025 திட்டத்தின் கீழ்,ரூ 60 இலட்சம் மதிப்பீட்டில்,ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமானப் பணி, 4).அழகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், NABARD RIDF 2024-2025-ன் கீழ், 188.48 இலட்சம் மதிப்பீட்டில்,கூடுதல் 8 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமானப் பணி, 5).சிலம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், NABARD RIDF 2024-2025- ன் கீழ்,ரூ 211.67 இலட்சம் மதிப்பீட்டில்,கூடுதல் 8 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமானப் பணி, ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை (க&ப) செயற்பொறியாளர் திருவருள்,வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன், ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன்,உதவி பொறியாளர் பூவழகி,ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலர்கள் நெப்போலியன், சந்திரலேகா,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாதேவி, அருள்மேரி,பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழ்முருகன் (ஆண்டிமடம்), மாயவேல் (அழகாபுரம்),சந்திரசேகர் (சிலம்பூர்) மற்றும் இருபால் ஆசிரியர்கள்,மாணவ, மாணவிகள்,அரசு அலுவலர்கள், செவிலியர்கள்,மருத்துவ பணியாளர்கள், ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.