நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படுவதாக நகர திமுகவினர் மீது சமூக ஆர்வலர்கள் புகார்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படுவதாக கூறி நகர திமுகவினர் மீது சமூக ஆர்வலர்கள் புகார்.;

Update: 2025-02-12 14:10 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் அரசு பள்ளி மற்றும் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 500 மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி சுவர்களில் நகர திமுக மாணவரணி சார்பாக பிரதமர் மற்றும் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் ஆர்பாட்டம் நடத்துவதாக 200 மேற்பட்ட நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் அரசு பள்ளி கல்லூரி சுவர்களில் அரசியல் கட்சி மற்றும் தனியார் விளம்பர சுவரொட்டிகளை ஒட்ட கூடாது என நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசாணை உள்ள நிலையில் அவற்றை மீறி சட்ட விரோதமாக நகர திமுகவினர் பல்லடம் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். எனவே நகர திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சட்ட விரோதமாக சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் அவற்றை அகற்றி மக்கள் வரிப்பணத்தில் கட்டிய பள்ளி கல்லூரி சுவரில் வர்ணம் பூசி அழகு படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Similar News