திருச்செங்கோட்டில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பேரணி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தொடங்கி வைத்தார்

திருச்செங்கோட்டில் எஸ் ஐ ஆர் பணிகள் நிறைவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவந்துள்ள நிலையில் ஜனவரி 1 .2026 தேதியை தகுதி நாளாக கொண்டு இளம் வாக்காளர்கள்புதிய வாக்காளர்களாகசேர்த்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஆட்சித் தலைவர் துர்க்கா மூர்த்திதலைமையில் நடைபெற்றது;

Update: 2025-12-23 11:59 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் எஸ் ஐ ஆர் பணிகள் நிறைவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவந்துள்ள நிலையில் ஜனவரி 1 .2026 ஆம் தேதியில்18 வயது பூர்த்தி அடையும் இளம் வாக்காளர்கள் தங்களை புதிய வாக்காளர்களாகசேர்த்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மாவட்ட தேர்தல் அலுவலரும்மாவட்ட ஆட்சியர் மாநாடு துர்கா மூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்டம் தேசிய மாணவர் படை மற்றும் ரெட் கிராஸ் மாணவ மாணவிகள் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை ஆட்சியர் துர்கா மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.பழைய பேருந்து நிலையம் வடக்கு ரத வீதி கிழக்கு ரத வீதி தெற்கு ரத வீதி வேலூர் ரோடு வழியாகசென்ற பேரணி வாலரை கேட் அருகே நிறைவடைந்தது.பேரணியில்மாவட்ட தொடர்பு அலுவலர் டி ஆர் ராஜேஷ் கண்ணா வருவாய் கோட்டாட்சியர் லெனின் திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி கல்லூரி முதல்வர் பிரசன்ன ராஜேஷ்குமார், தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் கேசவமூர்த்தி ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பேரணியின் தொடக்கத்திற்கு முன்னதாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவ மாணவிகள் விளக்க உரையாற்றினார்கள்.வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நினைவு பரிசு வழங்கினார். என் வாக்கு என் உரிமை என தமிழிலும், மை வோட் மை ரைட் என ஆங்கிலத்திலும் மாணவ மாணவிகள் உறுதி எடுத்துக் கொண்டனர். சிறப்பு வாக்காளர்பட்டியல் திருத்த பணிஎனப்படும் எஸ் ஐ ஆர்பணியின் போது திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை வாக்கு பதிவு உள்ளவர்கள், படிவம் திருப்பிக் கொடுக்காதவர்கள் என ஒரு லட்சத்து 93 ஆயிரம் பேர் கண்டறியப் பட்டுள்ள நிலையில் இடம்பெயர்ந்தவர்கள் விடுபட்டுப் போன தங்களது வாக்குகளை பதிவு செய்து கொள்ள படிவம் எண் 6 ல் கேட்கப் பட்டுள்ள விபரங்களை சேர்த்து கொடுத்தால் மீண்டும் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். எனவே வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் விழிப்புணர்வுடன் படிவம் எண் 6 ஐ பூர்த்தி செய்து கொடுத்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது. பேரணியில் சென்றவர்கள் புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை மாணவ மாணவிகள் ஏந்தி சென்றனர்.

Similar News