காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணிசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது, இந்த கோவில் தைப்பூசத் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் மிகவும் விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு விழாநிகழ்சிகள் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலை 4.30 மணிக்கு அமைச்சர், பொதுமக்கள்ளால் தேர் வடம் பிடிக்கப்பட்டு பக்தர்களால் இழுக்கப்பட்டு சிறிது தூரம் சென்றதும் மாலை 5 மணிக்கு தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. அங்கு ஏராளமான பக்தர்கள் தேர்முன் நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று மாலை 4 மணிக்கு பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டது.தேர் மலையை சுற்றிவந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது. 3வது நாளான இன்று மாலையில் தேர் நிலை அடைகிறது. திருவிழாவையொட்டி காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் கிராம மக்கள் குழுவாக சேர்ந்துவிரதம் இருந்து காவடி எடுத்துவந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். திருவிழாவையொட்டி சிவன்மலை பகுதியெங்கும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இரத்தினாம்பாள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். காங்கேயம் டி.எஸ்.பி மாயவன் தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.