கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் பொது நிதியிலிருந்து ரூ.4 கோடியே 44 லட்சம் மதிப்பில் சோளிங்கர் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேதம் அடந்த பழைய நகராட்சி கடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நகராட்சி துணைத்தலைவர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டிடங்களை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். நகராட்சி கவுன்சிலர் ராதா வெங்கடேசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.