திருப்பூர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை பனியன் தொழிலாளி கைது

திருப்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் தொழிலாளி கைது.;

Update: 2025-02-13 12:50 GMT
திருப்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் 29 என்ற பனியன் தொழிலாளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்.கோமதி பாலியல் தொல்லை கொடுத்த சந்தோஷை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News