தாராபுரத்தில் மழை நீர் வடிகால் வாரியம் அமைக்க நடவடிக்கை

தாராபுரத்தில் மழை நீர் வடிகால் வாரியம் அமைக்க நடவடிக்கை நகராட்சித் தலைவர் ஆய்வு;

Update: 2025-02-14 02:02 GMT
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 24 மற்றும் 26-வது வார்டு அம்பேத்கர்தெரு மற்றும் அலங்கியம் சாலை ஆகிய இரண்டு பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணிகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலங்கியம் சாலை மற்றும் அம்பேத்கர் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நகர்மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையின் பேரில் புதிய மழை நீர் வடிகால் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது என்றார். இதில் நகராட்சி பொறியாளர் சுகந்தி, 24 மற்றும் 26-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்கள் உமா மகேஸ்வரி, தனலட்சுமி அய்யப்பன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மலைச்சாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ரவி, தி.மு.க. நகர அவைத்தலைவர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News