யுஜிசி விதிகளை திருத்தம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் திராவிட விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் நெப்பத்தூர் கிராமத்தில் சோலார் பவர் பிளாண்ட் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக கிராமமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்;

Update: 2025-02-14 07:16 GMT
யுஜிசி கல்வியில் திருத்தம் செய்து தமிழகத்துக்கு ரூ.2152 கோடி ஒதுக்கிய நிதியை தடுத்து வைத்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும் கல்வி உரிமையை மத்திய அரசின் கல்விப்பட்டியிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக திராவிட விடுதலைக் கழகம் மகேசு,மற்றும் தமிழ் மண் தன்உரிமை இயக்கம் பேராசிரியர் ஜெயராமன், மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிப்பதை தடுத்து வரும் தமிழகத்தின் நியமன ஆளுநரை கண்டித்து முழக்கமிட்டனர். ஒன்றிய அரசு அதிக நிதியை பெற்றுக்கொண்டு தமிழகத்திற்கு இங்க இருக்குற நிதி வழங்காமல் வஞ்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என முழக்கமிட்டனர். ஆளுநரை திரும்பப் பெறு என்று கோரிக்கை வைத்தனர்.

Similar News