வரி செலுத்தாத குடோனுக்கு ஜப்தி நோட்டீஸ்
தாராபுரத்தில் வரி செலுத்தாத குடோனுக்கு ஜப்தி நோட்டீஸ்;
தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு எல்லீஸ் நகரில் வெங்கடேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு சொத்து வரி தொகை சுமார் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 756 நிலுவையில் உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இதுவரை நகராட்சிக்கு சொத்து வரி செலுத்தவில்லை என கூறப்படு கிறது. எனவே தாராபுரம் நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் உத்தரவின் பேரில் ஜப்தி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டும் பணிகளை தாராபு ரம் நகராட்சி உதவி வருவாய் அலுவலர்கள் தலைமை யில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி அலுவலர்கள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டும் போது உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே வரி கட்டி விட்டதாக கூறினார். இது தொடர்பாக நகராட்சி ஆணையாளரை சந்தித்து ஏற்க னவே வரி செலுத்தியுள்ளதையும் தெரிவிப்பதாக கூறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.