கடலூர் மாநகர திமுக அவசர செயற்குழு கூட்டம்
கடலூர் மாநகர திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.;
கடலூர் மாநகர திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகர திமுக அலுவலகத்தில் மாநகர செயலாளர் கே எஸ் ராஜா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சுவை சுரேஷ், செயற்குழு உறுப்பினர் விக்ரமன், மாநகர அவைத் தலைவர் தொமுச.பழனிவேல் ஆகியோர் முன்னிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற 21 22 ஆம் தேதி கடலூர் மாநகருக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சிறப்பான முறையில் வரவேற்க வேண்டும் என்றும், சுமார் 10,000 நபர்கள் மாநகரக் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும், வரும் மார்ச் 1, 2025 தமிழக முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும் கழக கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகளை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.