கள்ளச்சா விற்பனையாலும் கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வருகிறது
இளைஞர்கள் படுகொலை விவகாரத்தில் விசாரணை முடிவுபெறவில்லை. கள்ளச்சாராய விற்பனையால் கொலை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இவ்வழக்கில் அவர்களும் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று மாவட்ட எஸ்.பி வேண்டுகோள்;
. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமம் வடக்குதெரு பகுதியில் முனுசாமி என்பவரது குடும்பத்தினர் தொடர்ந்து சாராய வியாபாரம் செய்துவந்த நிலையில் சாரயவிற்பனை குறித்து கேள்வி எழுப்பிய தினேஷ் என்பவரை தாக்கியதாகவும் அதனை தட்டி கேட்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் ஹரிசக்தி(20) மற்றும் ஹரிஷ்(25) ஆகியோரை சாராய வியாபாரிகள் தங்கதுரை, அவரது சகோதரர் மூவேந்தன் சாராயம் விற்பனை செய்து போலீசாரல் கடந்த 11ஆம்தேதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த உறவினர் ராஜ்குமார் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். குடும்ப பிரச்சனை முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றதாக மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்ட நிலையில் இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இவ்வவழக்கில் கொலை சம்பவம் நடந்த உடனேயே மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அதிகாலைக்குள் மூவேந்தன் தங்கதுரை ராஜ்குமார் ஆகிய 3 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையில் குற்றவாளிகள் சாராய விற்பனை செய்ததை தடுத்ததால் தான் கொலை சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அதன் அடிப்படையிலும் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புலன் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இச்சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கில் நடந்து கொண்டார்கள் என்று தெரிய வந்தால் அவர்கள் மீதும் கட்டாயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நியாயமான முறையான நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றார்.