திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் சாமி தரிசனம்
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பக்தர்களுக்கு ஒரு மணி நேரம் தரிசனத்திற்கு நிறுத்தி வைத்த கோயில் நிர்வாகம் கோயில் நிர்வாகம் அவதி அடைந்தனர் பக்தர்கள்;
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பக்தர்களுக்கு ஒரு மணி நேரம் தரிசனத்திற்கு நிறுத்தி வைத்த கோயில் நிர்வாகம் கோயில் நிர்வாகம் அவதி அடைந்தனர் பக்தர்கள். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில இந்த திருக்கோயில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அவர் வருகைக்காக பாதுகாப்பிற்காக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஹரிகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ராஜாளி விமான படைத்தளத்தில் இருந்து தனி விமானத்தில் வந்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கார் மூலமாக சாலையில் திருத்தணி மலை கோயிலுக்கு வந்தடைந்தார் மலைக்கோவிலில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா ஆகியவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் இதனை அடுத்து திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் வேதாச்சாரியார்கள் திருக்கோயில் நிர்வாகத்தினர் பூமாலை அணிவித்து வரவேற்றனர் இதனைத் தொடர்ந்து மலைக் கோவிலில் கொடி மரத்தை வணங்கி விநாயகர் சன்னதியை வணங்கி , உற்சவர் சண்முகப் பெருமானை வணங்கி மூலவர் முருகப்பெருமானை 15 நிமிடத்திற்கு மேலாக அமர்ந்து சாமி தரிசனம் செய்தார் பவன் கல்யாண் இதனைத் தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகத்தினர் முருகப்பெருமான் சாமி படம் வழங்கி, மலர் மாலை மற்றும் பிரசாதம் வழங்கினார்கள் இந்நிகழ்வில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சாமி தரிசனம் வருகைக்காக ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாமி தரிசனம் சாதாரண பக்தர்களுக்கு செய்ய முடியாத அளவிற்கு திருக்கோயில் நிர்வாகம் தடுத்து நிறுத்தினர் கடும் வெயில் காரணமாக பக்தர்கள் அவதி அடைந்தனர் மேலும் அவர் வருகை தந்த நேரம் உச்சிக்கால பன்னிரண்டு மணி சாமிக்கு அபிஷேகம் நேரம் என்பதால் 20 நிமிடம் சாமிக்கு அபிஷேக செய்யாமல் அபிஷேகம் நேரம் தள்ளி சென்றது ஒரு துணை முதல்வருக்காக ஆகம விதிப்படி சாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டிய நேரத்தை 20 நிமிடம் கோயில் நிர்வாகம் தள்ளி வைத்தனர் பக்தர்கள் முருக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர் மேலும் ஆந்திர மாநில துணை முதல்வர் தனது வேண்டப்பட்ட ஆந்திர மாநில மீடியா மற்றும் வீடியோ கிராப்பர்களை அதிகளவு மலைக் கோயிலுக்கு திருத்தணிக்கு வரவழைத்து விட்டார் மேலும் அவரது ஜனசேனா கட்சியினர் அவரது ரசிகர்கள் என அனைவரும் முருகன் கோவில் மலை மீது திரண்டு விட்டதால் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிப் போயினர் மேலும் சாமானிய பக்தர்களை கடும் வெயிலில் காக்க வைத்துள்ளனர் விஐபி பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் வழங்கினார் திருக்கோயில் நிர்வாகத்தினர் சாமானிய பக்தர்களுக்கு ஒரு மணி நேரம் கடும் வெயிலில் காக்க வைத்தனர்.