விவசாயிகளின் தரவுகளை சரி பார்க்கும் பணி

முகாமில் கலந்து கொள்ள அழைப்பு;

Update: 2025-02-16 06:43 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) யோகேஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது வேதாரண்யம் பகுதி விவசாயிகளின் தரவுகளை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. வேளாண்மை துறையினர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களின் பயன்களையும் எளிமையாகவும், விரைவாகவும் விவசாய பெருங்குடி மக்கள் பெற்றிட ஏதுவாக விவசாயிகளின் தரவுகளை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஓர் அங்கமாக, விவசாயிகளின் நில உடைமைகளை சரி பார்த்து, நில உடைமையாளர்களிடம் ஒப்புதல் பெற்று பதிவு செய்ய, அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகங்களில் முகாம்கள் நடை பெற உள்ளது. பட்டாதாரர்கள் அனைவரும் தங்களின் நில உடைமை சிட்டா, ஆதார் அட்டை, ஆதார் இணைக்கப்பட்ட கைபேசியுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், தகவல்களுக்கு, உங்கள் பகுதி யில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News