தலைச்சங்காடு சல்லி கொல்லை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
தலைச்சங்காடு ஸ்ரீ சல்லிக் கொல்லை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ சல்லிக்கொல்லை மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவையில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோவிலின் முன் யாகசாலை அமைதத்து அதில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்து பூர்ணாகூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடகல் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வளம் வந்து கும்ப கலசத்தை அடைந்தது கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சல்லிக் கொல்லை மாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.