மனைவியை ரயிலில் ஏற்றிவிட வந்த கணவர் ரயிலிலிருந்து கீழே விழுந்து காயம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தனது மனைவியை ரயில் ஏற்றிவிட வந்தவர் ரயில் புறப்பட்ட பின்னர் வண்டியில் இருந்து கீழே இறங்கிய போது தவறி விழுந்து படுகாயம். கட்டைவிரல் சிதைந்து தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தவரை கண்டு ரயிலில் இருந்து கீழே குதித்த மனைவிக்கு லேசான காயம்.;

Update: 2025-02-16 09:48 GMT
. திருவாரூர் மாவட்டம் திருவாரூர் திருமஞ்சன வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்74 என்பவர். இவரது மனைவி ராணி 59 என்பவர் அகமதாபாத்திற்கு சில பெண்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். இன்று கும்பகோணத்தில் இருந்து அகமதாபாத் செல்வதற்காக குளிர்சாதன பெட்டியில் ரிசர்வேஷன் செய்துள்ளார். ராணி அகமதாபாத் ரயிலில் ஏற்றி விடுவதற்காக பாலசுப்பிரமணியன் ராணியுடன் மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்துள்ளார். காலை எட்டரை மணி அளவில் வந்த அகமதாபாத் ரயிலில் ராணி ஏரி உள்ளார். லக்கேஜை கொடுப்பதற்காக அவருடன் ரயிலில் பாலசுப்பிரமணியனு ஏறி உள்ளார். அப்போது ரயில் புறப்பட்டதால் பதட்டத்தில் பாலசுப்பிரமணியன் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார் இதில் நிலை தடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டது. கட்டைவிரல் சிதைந்தும் தலையில் இடுப்பிலும் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ராணி புறப்பட்ட ரயிலிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் ராணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ரயில்வே போலீசார் பாலசுப்பிரமணியனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Similar News