மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி இறந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.;

Update: 2025-02-17 03:44 GMT
மணப்பாறை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி எம்.இடையபட்டியை சோ்ந்தவா் முருகையன் மகன் சண்முகவேல் (49), கூலித் தொழிலாளி. இவா் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அருகேயுள்ள மரவனூா் குளத்தில் மீன் பிடிக்கச் செல்வதாக தனது மகளிடம் கூறிச் சென்றவா் இரவு வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவா் கிடைக்காததால் இதுகுறித்து அவரது மனைவி சித்ரலேகா (44) மணப்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து சனிக்கிழமை முழுவதும் மணப்பாறை தீயணைப்புத் துறை வீரா்கள் கொண்டு குளத்தில் சண்முகவேலைத் தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குளத்தில் மிதந்த சண்முகவேல் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா். மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Similar News