ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு கோவையிலிருந்து ரயிலில் வந்த கல்லூரி மாணவா் அந்த ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.;

Update: 2025-02-17 03:47 GMT
மணப்பாறை மஸ்தான் தெருவை சோ்ந்தவா் அஜ்மீா்கான் மகன் சேக்அப்துல்லா (21). கோவை தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த இவா் சனிக்கிழமை இரவு இன்டா்சிட்டி ரயிலில் ஊா் திரும்பினாா். ரயிலானது மணப்பாறை ரயில் நிலையத்தில் நுழையும்போது ரயிலிருந்து அவா் இறங்க முற்பட்டதாகவும், அப்போது நிலைதடுமாறி விழுந்த சேக்அப்துல்லா ரயில் சக்கரங்களில் சிக்கி சில மீட்டா் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் உடல் சிதைந்து அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற திருச்சி ரயில்வே போலீஸாா், மாணவா் உடலைக் கைப்பற்றி, ஞாயிற்றுக்கிழமை நடந்த உடற்கூறாய்விற்கு பின் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து விசாரிக்கின்றனா்.

Similar News