மயிலாடுதுறை பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவள்ளிஇடமாற்றம்

மயிலாடுதுறை பெரம்பூர் காவலர் சரகத்திற்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவள்ளி இடமாற்றம்.;

Update: 2025-02-17 11:40 GMT
மயிலாடுதுறை பெரம்பூர் காவல் ஆய்வாளர் பணி மாற்றம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக... பெரம்பூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட காவல் சரகத்துக்கு உட்பட்ட சுவாமிமலை காவல் ஆய்வாளர் மலைச்சாமி பெரம்பூர் காவல் நிலையத்துக்கு ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இரண்டு நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட திருச்சி சரக ஐஜி நிர்மல் குமார் ஜோஷி நடவடிக்கை.

Similar News