புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், வண்ணார தெருவைச் சேர்ந்த கோபிநாத் (47) இவர் இலுப்பூர் பெட்ரோல் பங்க் அருகில் குட்கா பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற இலுப்பூர் காவல்துறை நாகராஜன் SI அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.