கடலூர்: திமுக செயல்வீரர்கள் கூட்டம்

கடலூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-02-18 05:13 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு 21.02.2025 வெள்ளிக்கிழமை 22.02.2025 சனிக்கிழமை வருகையையொட்டி கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கடலூர் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் சட்டமன்ற தொகுதி சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் , கழகத் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி ,கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ, கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, தொகுதி பார்வையாளர், கடலூர் தொகுதிக்குட்பட்ட மாநகர, ஒன்றிய,பகுதி, கிளை,வார்டு கழக செயலாளர்கள்,நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Similar News