கடலூர்: காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு
கடலூர் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு குவிகிறது.;
புனித அன்னாள் மகளிர் மேல்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுமி நேற்று மாலை தேவனாம்பட்டினம் தாத்தா வீட்டில் தங்கி இருந்தவர் டியூஷன் செல்வதற்காக சென்றவர் ரோட்டில் தனியாக நின்று அழுது கொண்டிருப்பதை பார்த்து தேவனாம்பட்டினம் பஞ்சாயத்தை சேர்ந்த பாவாடைசாமி என்பவர் கடலூர் புதுநகர் காவல் நிலையம் அழைத்து வந்து ஒப்படைத்தார். கடலூர் புதுநகர் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா குழந்தையிடம் சாதுர்யமாக பேசியதில் குழந்தை பெயர் பவஸ்ரீ வயது 6, தந்தை பெயர் வல்லரசன் என தெரிந்து மேற்படி பள்ளிக்கு சென்று விசாரணை செய்து பவஶ்ரீயின் தாத்தா வெங்கடேசனை நேரில் வரவழைத்து சிறுமியை நல்ல முறையில் ஒப்படைத்தார். குழந்தையை பத்திரமாக மீட்டு கொடுத்த தாத்தா காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார். இதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.