அரியலூரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனு அளிப்பு

அரியலூரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனு அளிக்கப்பட்டது.;

Update: 2025-02-19 02:56 GMT
அரியலூர், பிப்.19- அரியலூரிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம், நகர பொது நல வளர்ச்சி சங்கத்தினர் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்கள் மனுவில், அரியலூர் நகரில் கடந்த சில தினங்களாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஓரிரு வாரங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் நகர் முழுவதும் உள்ள அனைத்துத் தெருக்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News