மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கருப்பு தினமாக அனுசரித்து மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டம்:-;
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கருப்பு தினமாக ஆண்டுதோறும் வழக்கறிஞர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2009ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கருப்பு தினமாக அனுசரித்து இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து நீதிமன்ற வாயில் முன்பு சங்கத் தலைவர்கள் கலைஞர் மற்றும் வேலு குபேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐ வழக்கு விசாரணையை உடனடியாக முடிக்க வேண்டும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும், வழக்கறிஞர்கள் நலநிதி முத்திரை உயர்த்தப்பட்டதை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.