ஆண்டிமடத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
ஆண்டிமடத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.;
அரியலூர், பிப். 20- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு மாநில திட்டக் குழு, தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், தொழில்முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றறது. பயிற்சியை, வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து,இப்பயிற்சி மூலம் தொழில்முனைவோர்கள் தங்களது தொழிலை மேம்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். பயிற்றுநர் அருண்குமார் கலந்து கொண்டு 38 பயனாளிகளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியில்,வங்கியில் கடன் பெறுவது எப்படி?வங்கியில் எந்த மாதிரியான கடன்கள் உள்ளன,தொழிலுக்கான அரசின் சலுகைகள் என்ன?, தொழிலுக்கான திட்ட அறிக்கைகள் எப்படி தயாரிப்பது?தொழிலில் வரவு செலவு கணக்குகளை பராமரிப்பது எப்படி?, தொழில் சட்டங்கள், பொருள்களை எவ்வாறு சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட விளக்கங்களை அளித்து பயிற்சியளிக்கப்பட்டது. தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட திட்ட மேலாளர் பிரவீன் செய்திருந்தார்.