விளாங்குடி அருகே அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொகுப்பூதிய உதவி பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம்

விளாங்குடி அருகே அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொகுப்பூதிய உதவி பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-02-20 15:01 GMT
அரியலூர் பிப்20- அரியலூர் மாவட்டம் விளாங்குடி அருகே அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொகுப்பூதிய உதவி பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2010ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் இது நாள் வரை பல்கலைக்கழகமோ,தமிழக அரசும் பணிநிரந்தரம் செய்யாததை கண்டித்து தொகுப்பூதிய உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 15க்கும் மேற்பட்ட தற்காலிக பேராசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News