சேலம் தாதகாப்பட்டியில் வீடு புகுந்து தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு
போலீசார் விசாரணை;
சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் 6-வது தெருவை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 56). சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். மதியம் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த ½ பவுன் தங்க நகை, ¼ பவுன் தங்க நாணயம், 5 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. மர்மநபர்கள் வீடு புகுந்து திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.