சேலம் சிவதாபுரம் பகுதியில் மயான எரிமேடை அமைக்கும் பணி

அருள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்;

Update: 2025-02-21 04:01 GMT
சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 22-வது கோட்டம் சிவதாபுரத்தில் போடிநாயக்கன்பட்டி, மலங்காட்டான் தெரு, காட்டூர் மெய்யந்தெரு, காட்டுவளவு, பெருமாள்கோவில்காடு, சின்னகுட்டி தெரு, லட்சுமிநகர், முத்துநாயக்கர் காலனி பகுதியிலும், மொரம்புகாடு, குடுமியான்தெரு ஆகிய பகுதிகளுக்கு மயான எரிமேடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிளை அருள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதேபோன்று ஆண்டிப்பட்டி, மாதாகோவில், ஜெய்நகர், ஆண்டிப்பட்டி காலனி பகுதி மக்கள் கைப்பந்து, கிரிக்கெட், சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை பெறவும், போலீஸ், ராணுவம் உள்ளிட்ட பணிகளில் சேரவும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில் உள்ள மைதானத்தை மேம்படுத்தவும் சட்டசபை சபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் குப்பாண்டியூர் கிராமத்தில் சட்டசபை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது பல்வேறு கிரிக்கெட் குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியதுடன் அவர்கள் நன்றாக விளையாடவும், படிக்கவும் அறிவுரை வழங்கினார்.

Similar News