சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் லாரி மோதி வாலிபர் சாவு
போலீசார் விசாரணை;
சேலம் சூரமங்கலம் பகுதி ஜாகீர் அம்மாபாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 36). உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று தன்னுடைய மோட்டார் சைக்கிளில் உணவு டெலிவரி செய்ய சென்ற போது கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் லாரி ஒன்று சிவசக்தி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிவசக்தி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சிவசக்திக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார்.