மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது!;

Update: 2025-02-21 13:34 GMT
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது! திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் முன்னிட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு (HQ) தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கீழ்கண்ட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம், தேமதுர தமிழோசை உலகமெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம், இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத்தமிழ் மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன், என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது. உடன் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Similar News