திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கனடா நாட்டு பயணியிடம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2025-02-22 02:14 GMT
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு விற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமை களை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய் தனர். அப்போது கனடாவைச் சேர்ந்த பிரிட்டானிய சிசிலி (வயது 34) என்பவர் தனது கைப்பையில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் துப்பாக்கி தோட்டாக்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத னையடுத்து துப்பாக்கி தோட்டக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News