திருச்சி: கத்தியை காட்டி மிரட்டல்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது;
திருச்சி கீழ தேவதானம் காவேரி ரோட்டை சேர்ந்தவர் ரவி (60). இவர் தேவதானம் சந்திப்பு பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நி லையில் நேற்று அவர் கடையில் இருந்தபோது, அங்கு வந்த கீழ சிந் தாமணி ஓடத்துறை ரோடு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் ரவியிடம் ரூ.500 கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் கத்தி முனையில் பணப்பெட்டியில் இருந்த ரூ.3,100-ஐ பறித்து சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டைபோலீ சார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.