அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு மாதாந்திர கூட்டம்...
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.;
அரியலூர், பிப்.22- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு உடையார்பாளையம்வட்டக் கிளையின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது வட்டத் தலைவர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நீத்தார் நிதியுதவி கெட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார், செயலாளர் கலியமூர்த்தி அறிக்கையையும் பொருளாளர் ராமமூர்த்தி வரவு செலவையும் நீத்தார் நிதி உதவி திட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் அத்திட்ட வரவு செலவுகளையும் வாசித்தார். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் ஏற்றப்பட்டன. மார்ச் மாதம் 14ஆம் தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க கோரிக்கை முழக்க அறவழி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தீர்மானம் இயற்றினார். மேலும் பத்து அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் 70 அகவைக்கு 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் கோருதல் பழைய பென்ஷன் தொடர செய்தல் குடும்ப பாதுகாப்பு நிதி ரூபாய் 3 லட்சமாக உயர்த்த கோருதல் கம்ப்யூடேசன் பிடித்தம் 12 ஆண்டுகளாக மாற்ற கோருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கமிட தீர்மானித்தனர். கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள சோழகங்கம் பொன்னேரியை ஆழப்படுத்தி சுற்றுவட்ட பாதை அமைத்து சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என தீர்மானங்களை இயற்றினர்.