வீரபாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட உதவிகள் வழங்கப்படுகிறது
ராஜமுத்து எம்எல்ஏ அறிக்கை;
சேலம் வீரபாண்டி தொகுதி எம்எல்ஏ ராஜமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீரபாண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் எனது தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சன்னியாசி குண்டு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் காலை 7மணிக்கு உணவு வழங்கப்படுகிறது. தொடர்ந்து சீரகாபாடியில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது. அதேபோல இளம்பிள்ளை அடுத்த முருங்கப்பட்டி பகுதியில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக பங்கேற்று சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.