பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.;

Update: 2025-02-22 12:03 GMT
அரியலூர், பிப். 22- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், விளாங்குடி அடுத்த காத்தான்குடிகாடு அண்ணா பல்கலைக் உறுப்பு பொறியியல் கல்லூரி வளாகம் முன், தொகுதிப்பூதிய பேராசிரியர்கள் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த உதவிப் பேராசிரியர்கள் அனைவரையும் நிரந்தரமாக்கியது போன்று இக்கல்லூரியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய  பேராசிரியர்களையும் பணி நிரந்தமாக்க வேண்டும். தொகுப்பூதிய உதவிப் பேராசிரியர்களுக்கு யுஜிசி விதிமுறைகளுக்கு ஏற்ப ஊதிய உயர்வை உயர்த்தி வழங்கிட வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தையும் செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொகுப்பூதிய உதவிப் போராசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். :

Similar News