பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-02-22 12:12 GMT
அரியலூர்,பிப்.22- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாரத்துக்கு 5 நாள்கள் வேலை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக கடைநிலை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.பொதுமக்களுக்கு போதுமான சேவையை உறுதிச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மண்டலச் செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். படவிளக்கம்: அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி முன் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினர்.

Similar News