இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-02-23 14:28 GMT
அரியலூர், பிப். 23- அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாவட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அக்கட்சியின் மாவட்டச் செயலர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எதிர்வரும் நாள்களில் ஒன்றிய, நகர, மாவட்ட மாநாடுகள் நடத்துவது மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வை.சிவபுண்ணியம் கலந்து கொண்டு, அரசியல் சூழல்கள், கட்சி நூற்றாண்டு வரலாறு பேரவைக் கூட்டம், நடைபெற வேண்டிய மாநாடுகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் தண்டபாணி,பாண்டியன், ஆறுமுகம், மணிவண்ணன், ரெங்கசாமி, கொளஞ்சியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News